Map Graph

2010 மும்பை எண்ணெய் கசிவு

2010 மும்பை எண்ணெய் கசிவு பனாமா நாட்டைச் சேர்ந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.50 மணியளவில் தெற்கு மும்பையின் நவ சேவா துறைமுகத்திலிருந்து வெளியே சென்றுகொண்டிருந்த எம்.வி. எம்.எசு.சி சித்ரா என்ற கப்பலும், துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த எம்.வி. கலீசியா 3 என்ற சரக்குக் கப்பலும் மும்பைக்கு அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. எம்.வி. எம்.எசு.சி சித்ரா என்ற கப்பல் சேதமடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து விட்ட காரணத்தால் கப்பலில் இருந்த 1219 சரக்குப் பெட்டகங்களில் கிட்டத்தட்ட 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் கடலில் மூழ்கிவிட்டன. கப்பல் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2010 ஆண்டு சூலை மாதம் 18 அன்று கலீசியா 3 கப்பல் வேறொரு விபத்தில் சிக்கியதாகவும் அறியப்படுகிறது.

Read article